சனி, 9 ஏப்ரல், 2011
4.கல்லூரி(கள் ஊறி) காலம்.. Kick is always there rite :-)
அன்புள்ள நண்பர்களுக்கு,, ஒரு வழியா வார கடைசி வந்துடுச்சி..என்னா வெய்யில்லு..மூளை உருகி மூக்கு வழியா வந்துடும் போலிருக்கு..ஆபீஸ்ல உட்க்கார்ந்து நம்ம கதைய எழுத முடியல....இத எழுதுறப்ப நம்ம காலேஜ் டைம்கே போன மாதிரி பீலிங்..பாதியில நிறுத்தவும் முடியாது தொடரவும் முடியாது..அதான் வார கடைசியில அனத்தி தள்ளிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்...படிக்கறவங்களும் சீரியஸா எடுத்துக்க மாட்டீங்க... அந்த ரயில்வே ஸ்டேஷன் க்ரூப்ல ரெகுலரா வரது பாரதியும், ஷங்கரும்.. நிவாஸ் அப்பப்ப வருவான்.. என்கிட்ட எப்பவும் பேச்சை ஆரம்பிக்கறது ஷங்கராதான் இருப்பான்..நா கூட என்கிட்ட பேசத்தான் அந்த பக்கமா பாசத்தோட வரானுங்க பய புள்ளைங்கன்ட்டு ரொம்ப நாள் நெனச்சிட்டு இருந்தேன்..அப்புறம்தான் தெரிஞ்சிது மொத ரவுண்டு முடிச்சிட்டு 2nd ரவுண்டு சாப்பிட வராங்கன்ட்டு..அங்கதாங்க அந்த விஷயதுலதாங்க எங்க நட்பு ஆரம்பிச்சிது....இவங்க 3 பேருக்கும் எனக்கும் ஒரு முக்கியமான ஒற்றுமை இருக்கு.. அது என்னன்னா பேச்சு.. ஒருத்தவனுக்கு ஒருத்தவன் சளைச்சவன் இல்லைங்க..நா ஆரம்பத்துல யாருகிட்டயும் அதிகம் பேச மாட்டேன்.. எல்லாரையும் பார்த்து ஈனு ஒரு இளிப்பு இளிக்கரதோட சரி.. அதுக்கப்புறம் நாங்க மதியம் ஒன்னா திரிய ஆரம்பிச்சோம்.. நம்ம காலேஜ் பக்கத்துல நாங்க சாப்பிடாத மெஸ்சே இல்ல..ஒவ்வொருதவனும் அவன் அவன் பெருமைய.. பள்ளியில, காலேஜ்ல படிச்ச அழக மாத்தி மாத்தி பேசிப்போம்..எங்களுக்குள்ள நல்ல புரிதலும் நட்பும் ஏற்பட ஒரு தொடக்கம் அந்த மதிய நேரம்தான்..ஆனா நெருங்கிய நண்பர்கள் ஆனது கார்த்தி வீட்டுலதான் :-) அப்படியே மெஸ் தேடும் படலத்துல நாங்க ரயில்வே ஸ்டேஷன் விட்டு வெளிய வர ஆரம்பிச்சோம்.. அங்கதான் எங்களுக்கு தினேஷ்,மலையமான்,மணவாளன்,சதாத்,யோகேஷ் கிட்ட நெருங்க வைப்பு கெடைச்சுது..இதுல sometime malai,thenesukum yeppavum மணவாளனுக்கு என்னை சீண்டி பாக்கறதுல எப்பவும் ரொம்ப குஷி. காலேஜ்ல எனக்கு பின்னாடி பென்ச்ல ஒக்காந்திருப்பான்..இடுப்புல குத்தி என்ன ஒரு அடி குதிக்க விடறதுல அவனுக்கு ரொம்ப ஆனந்தம் :-) இப்படியே போயிட்டு இருந்தப்ப ஒரு மறக்க முடியாத..இன்னைக்கு நெனச்சு பார்த்தா கூட சிரிக்கற மாதிரியான சம்பவம் நடந்துது..அன்னைக்கு ஐடி கார்டுக்கு போட்டோ எடுக்கராங்கண்டு ஒரு தகவல் காத்து வாக்குல காதுக்கு வந்துது..எல்லாரும் நம்ம ஹாஸ்டல், அக்கம் பக்கம்னு போயி இயற்கையா இருக்கற எங்க அழகுக்கு இன்னும் கொஞ்சம் அழகு கூட்டிட்டு வந்து ஆர்வமா ஒக்காந்திருந்தோம்..அந்த நேரமும் வந்துது பக்கத்துல இருந்தவன் தல மேல கால வச்சி பின்னங்கால் பிடரில பட ஓடுனோம்..கேமராவ மூக்கு நேரா வச்சி..வடைய பாக்கற காக்கா மாதிரி ஒரு பார்வை பார்த்தாரு நம்ம போடோக்ராபர்..வித விதமா நிக்க வச்சி இரண்டு மூணு போட்டோ எடுத்தாரு..நாங்களும் பெருமையா போஸ் கொடுத்தோம் ..ஒரு வாரம் கழிச்சி எங்க அழகு திருமுகத்தோட அந்த ஐடி கார்டு வாங்க அதே வேகத்தோட ஆபீஸ் போனோம்..கூட்டம் அதிகமா இருந்ததால எங்களையே பார்த்து எடுத்துக்க சொன்னாங்க..தேடி தேடி பாக்கறோம் கடைசி வரைக்கும் கெடைக்கல..வாடி போன முகத்தோட..ஏமாற்றத்தோட திரும்பறோம்.. அப்பத்தான் பரமேஸ்வரி பிரவீனா பேயறஞ்ச முகத்தோட நம்ம ஐடி கார்டு இதுலதான் இருக்குன்ட்டு சொன்னாங்க..எங்க அறிவை போல பார்வையும் கொஞ்சம் கூர்மையாக்கிட்டு தேடுனோம்..பேர வச்சி எப்படியோ கண்டுபுடிசோம்..என் போட்டோவ பார்த்தோன என்னாலேயே சிரிப்பா தாங்க முடியல..சரி நம்ம கதைதான் இப்படின்ட்டு நெனச்சி திரும்பி பார்த்தேன்..நம்ம பய புள்ளைங்க மண்ணுல விழுந்து பொரண்டு சிரிச்சிகிட்டு இருக்கானுங்க..அதுலயும குறிப்பா பாரதி,சிவாவோட போட்டோ ரொம்ப பிரமாதமா இருந்துது..யாருகிட்டலாம் அந்த ஐடி கார்டு ஒரிஜினல் இருக்கோ அவங்க எல்லாம் எடுத்து பாருங்க நா சொல்றது உண்மையா போய்யன்ட்டு தெரியும்..ஹாலிவுட் என்னங்க ஹாலிவுட்..இப்படி ஒரு வித்தியாசமான விலங்குகள வச்சி இவ்ளோ லோ பட்ஜெட்ல ஒரு காமெடி படம் எடுத்தாரே அந்த போட்டோக்ராபரதாங்க நாங்க இன்னும் தேடிட்டு இருக்கோம்.. இதுல நம்ம நிவாஸ் பய மட்டும் ஆளை காணும்..2 நாள் அப்புறtம்தான் போட்டோவ காட்டுனான் அவன் போட்டோ மட்டும் நார்மல்..பய சத்தம் போடாம தீபக் செராக்ஸ்(ராம்ஸ் இல்லைங்க..) போயி வேற போட்டோ வச்சி செராக்ஸ் எடுத்துட்டு வந்துட்டான்..நாங்களும் படை எடுத்தோம்..காரியத்த சத்தம் போடாம முடிச்சோம்..ஆனா பாவம் எங்க போட்டோவ செராக்ஸ் எடுத்த புனித காரியத்த செஞ்ச பொண்ணுங்க வேலைய விட்டு போயிட்டாங்க..இப்ப காசி பக்கம் ராமேஸ்வரம் பக்கம் ...
3.கல்லூரி(கள் ஊறி) காலம்.. Kick is always there rite :-)
அன்புள்ள நண்பர்களுக்கு., தினமும் நம்ம பதிவுகளை பகிர்ந்துக்கனும்னு நினைத்தேன் ஆனா முடியல.. வர வர அலுவலகத்துல வேலையெல்லாம் செய்ய சொல்றாங்க.. நாட்டுல என்ன நடக்குதுன்ட்டே புரியல..ஒரே அராஜகமா இருக்கு :-( சரி நம்ம கல்லூரியோட முதல் வாரத்துக்கு போகலாம் வாங்க..ஒரு நாள் முடிஞ்சிது ரொம்ப சீக்கிரம் வீட்டுக்கு போயாச்சு..அன்னைக்கு தூக்கமே வரல(எப்படி வரும் அதான் வகுப்புல நல்லா தூங்கிட்டனே).. அன்னைக்கு நடந்த நிகழ்வுகள்..புது அறிமுகங்கள்னு..அசை போட்டு தனியா சிரிச்சிட்டு இருக்கேன்(வேற எதுவும் இல்லைங்க உங்க மேல சத்தியம்)..அம்மா வந்து சாப்பிட கூப்பிடறாங்க..அவ்ளோதாங்க உலகமே மறந்துடுச்சி சாப்பிட போயிட்டேன்(அம்மா சொன்னத கவனிக்காம இருந்திருப்பெண்டு நெனச்சிங்களா ?).. ஒரு வாரம் ஆச்சு..ஒரு பதுகாப்புனர்வையும் நட்புணர்வையும் உணர ஆரம்பிச்சேன்(கடைசி வரைக்கும் படிக்கதான் இங்க வந்திருக்கோம்னு உணரல)..நா எடுத்த முடிவு தப்பானது இல்லைன்னு தெளிவு வந்துது..அதுக்கு இன்னொரு காரணம் நம்ம சண்முகராஜ் சீனு இருவரும் என்னோட பள்ளி நண்பர்கள்..முதல் வாரத்துலேயே எங்களோட விட்டு போன அலைவரிசைய புதுபிக்க முடிஞ்சிது.. வகுப்பு முடிஞ்சோன அமுது நா ராமலிங்கம் 3 பேரும் பேருந்து நிலையம் வரைக்கும் சேர்ந்து போற வழக்கம் உண்டானது.. இரண்டாவது வாரத்துல எங்க கூட்டணி நேரம் கொஞ்சம் விரிவடைஞ்சது..அதுக்குள்ள நெருங்கிய நட்ப்பானு கேக்கறீங்க..நா விரிவடைஞ்சதா சொன்னது எங்க நட்ப இல்ல..எங்க பயணத்தை.. ஆமா..போன வாரம் வரைக்கும் பேருந்து நிலையம் வரைக்கும் இந்த வாரத்துல இருந்து S P கோயில் தெருவுல இருக்க ஆனந்தா உணவகம் வரைக்கும்..தினமும் ஒருவர்ன்னு முறை வைத்து ஆனந்தா உணவகத்தை வளர்க்க ஆரம்பிச்சோம்..நாங்களும் கொஞ்சம் வளர்ந்தோம்(உயரம் இல்லைங்க அகலம்) இன்னைக்கு அங்க போனா கூட எங்க 3 பேருக்கும் ஒரு சின்ன கோவில் கட்டி பூஜை செய்யும் அருமையான காட்சிய ஆனந்தால பார்க்கலாம் நீங்க(இது பல மாதங்கள் தொடர்ந்தாலும் இந்த விஷயம் எங்க 3 பேர தவிர இன்று வரை வேற யாருக்கும் தெரியாது).. இரண்டாவது வாரத்துல இருந்து வகுப்பிலிருந்து உடனே கிளம்பும் பழக்கம் மாறி..எதாவது மரத்தடியில சின்ன பஞ்சாயத்துக்களை நடத்த ஆரம்பிச்சோம்....இப்பவும் என்னால பார்வையாலனாதான் இருக்க முடிஞ்சிது...மக்களோட சேட்டைகளை ரசிக்க ஆரம்பிச்சேன்..அதுல ஒரு மறக்க முடியாத சம்பவம்..சிவா ஒரு மிதிவண்டி வச்சிருந்தான்(அதுலதான் குரங்கு பெடல் அடிச்சிட்டு தினமும் கல்லூரிக்கு வருவான்).. நம்ப நண்பன் ஒருவன் அவன பார்த்து ஒரு கேள்வி கேட்டான்.. நண்பன் : மிதிவண்டி உயரம் கூட இல்லை உனக்கு மிதிவண்டி தேவையா..? சிவா : மச்சி நீ கூடத்தான் புகைவண்டில போற..அதுக்காக நீ என்ன புகைவண்டி உயரமா இருக்க? சிவாவை மற்றவர்கள் கவனிக்க மதிக்க காரணமான நிகழ்வு அதுதான் :-) அன்றிலிருந்து சிவாவை மக்கள் எல்லாரும் ஷாருக்கான் என்று அன்போட கூப்பிட ஆரம்பிச்சாங்க(பாவம் சிவா வஞ்சப்புகழ்ச்சி அணிய படிக்காம விட்டுட்டான்..) வகுப்பு நேரம் முழுக்க நண்பர்கள் புடை சூழ வாழ பழகியாச்சு.. ஆனா இந்த உணவு இடைவேளைக்கு மட்டும் யாரும் சிக்கல கொஞ்ச நாள்(நல்ல வேளை சிக்கல நா சாப்பிடறத பார்த்தே பல நண்பர்களுக்கு வயிறு நெறஞ்சிருக்கு.. எடுப்பு சாப்பாடு 2 சாப்பிடுவேங்க).. நம்ம புகைவண்டி நிலைய உணவகம்தான் எனக்கு சத்திரம் அப்ப(வீட்டுல இருந்து ஒரு டப்பா கொண்டு வந்திருக்கலாம் ஆனா என் மூளை மாதிரி என் கையும் எப்பவும் வெறுமையா இருக்கணும் எனக்கு :-)). அங்கதான் உணவு நேரம் முடியற வரைக்கும் தனிமையில் என்னோட நடமாட்டம் இருக்கும்...கொஞ்ச நாளுக்கப்புறம் ஏதோ ஒரு குழு என்னை கண்காணிப்பதை உணர்ந்தேன்..என் கவனத்துக்கும் வந்தாங்க..என்னை பார்த்து ஏதோ சொல்றாங்கண்டு புரியுது..நல்லதோ கெட்டதோ நம்பள பத்தி 4 பேசுறது தெரிஞ்சா ஒரு அல்ப்பத்தனமான பெருமை வருமே..அது எனக்கும் வந்துது...கொஞ்ச நாளுக்கப்புறம் என்கிட்ட பேச ஆரம்பிச்சாங்க. என்னையும் ஒரு மனுஷனா மதிச்சி பேச்சு கொடுத்த அந்த அப்பிராணிகள் யாருன்ட்டு அடுத்த பதிவுல பார்ப்போம்..
2.கல்லூரி(கள் ஊறி) காலம்.. Kick is always there rite :-)
அன்புள்ள நண்பர்களுக்கு, அது நம்ம ராமலிங்கம்..மெல்ல பக்கத்துல போனேன்..கொஞ்சமா பேச ஆரம்பிச்சோம்.. அப்ப வாங்க..போங்கன்ட்டு ரொம்ப மரியாதையை கொடுத்து பேசிக்கிட்டோம்.. மெல்ல கார்த்தி குழுவோட ஐக்கியமாகி வகுப்புக்கு உள்ள வந்தாச்சு.. அமுது கார்த்தி நான் ராமலிங்கம் ஒரே பெஞ்சில செட்டில் ஆனோம்.. அமிர்தலிங்கத்த பார்த்த முதல் பார்வையிலேயே எனக்கு புரிஞ்சிடுச்சி அவன் நம்பள மாதிரி ஊமை குசும்புன்ட்டு..எந்த வாத்தியார் முதல் வகுப்புன்ட்டு நினைவு இல்ல..மதனகோபால் நெனைக்கறேன்.. நம்ப பய ஒருத்தவன் நோட்ஸ் எழுதறப்ப பாதியிலேயே(நோட்ல ஒரு வரிய பாதி முடிச்சி அதோட தொடர்ச்சியா அடுத்த வரில) மடக்கி மடக்கி எழுதுனான்..என்னடான்ட்டு பார்த்தா..மதன் சார் போர்ட்ல இடம் இல்லைன்ட்டு மடக்கி அடுத்த வரியில எழுதுனத பார்த்து அப்படியே காப்பி அடிச்சிட்டான் :-) இப்படி முதல் வகுப்பே ரொம்ப பிரமாதமா ஆரம்பிச்சிது.. மதியம் உணவு வேலை.. அமுது கார்திலாம் கெளம்பிட்டாங்க.. ராமலிங்கத்தையும் காணும் எங்கயோ சத்தம் போடாம கெளம்பிட்டான்..நமக்கு எப்பவும் சோறு கண்ட இடம் சொர்க்கம்.... தனியா போய் எனது சிறிய வயித்த நெரப்பிட்டு இலக்கு இல்லாம திரிஞ்சேன்.. எங்க போறதுண்டு தெரியல..வகுப்புக்கு வந்தேன்..4 பொண்ணுங்க இருந்தாங்க..அதுல ஒரு பொண்ணு மட்டும் என்ன காமெடி பீஸ் தோரணைல பார்த்துது அது பரமேஸ்வரி.. அப்பலாம் ஏன் முகத்துல...உடை அணியும் தோரணைல ஒரு பைத்தியகாரதனம் தெரியும்(உங்க mindvoiceah கேட்ச் பண்ணிட்டேன்..இப்பவு நா அப்படிதான் இருக்கறேன்ட்டு சொல்லறீங்க சரியா.. )...ரொம்ப நீளமான சட்டை.. சரியா வாராத தலை முடி..குனிஞ்ச தலை நிமிராம போறதுன்ட்டு.. யாரா இருந்தாலும் என்னை அப்படிதான் பார்த்திருப்பாங்க.. என்ன மாத்தறதுக்காக இளங்கலை படிக்கறப்பவே கார்த்தி ரொம்ப முயற்சி பண்ணிருக்கான்(அவனோட பரிசோதனைக்கு நா ஒரு எலி)..அவோனோட தாக்கம் என்கிட்ட இரண்டு நாளுக்கு மேல தாக்கு புடிக்காது.. சரி நம்ப கதைக்கு வருவோம்.... யாரும் தெரிஞ்சவங்க இல்ல நா வேற அவசரப்பட்டு வகுப்புக்குள்ள வந்துட்டேன்..என்ன பன்றதுன்ட்டு தெரியல..அப்படியே கொஞ்சமா தூங்க ஆரம்பிச்சேன்..அமுது வந்து எழுப்புனான்..அப்படியே அந்த தூக்க கலக்கத்துல முதல் நாள் முடிஞ்சிது..ஏதோ சாதிச்ச நெனப்புல சந்தோசமா முதல் ஆளா வகுப்பை விட்டு வெளிய வந்தேன்..மெல்ல நடக்க ஆரம்பிச்சேன் பேருந்து நிலையம் நோக்கி..அமுது பின்னாடி வந்து மடக்குனான்..அவன் வண்டியில ஓசி சவாரி முதல் நாளே..கொஞ்ச நேரம் ஏதோ மொக்கைய போட்டோம் கெளம்பலாம்னு பார்த்தா நம்ப ராமலிங்கம் பரிதாபமா நின்னுக்கிட்டு இருந்தான்(அமுது பவம் மாட்டிகிட்டு கழட்டி விடவும் முடியாம ரொம்ப பீல் பன்னிருப்பான்ல )..சரி சின்ன பையந்தானன்ட்டு அவனையும் கெளப்பிக்கிட்டு சேர்ந்தோம்..வீட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு. இப்படியே கொஞ்ச நாள் போயிட்டு இருந்துது...என்னோட வட்டம் அப்ப ரொம்ப சின்னது.. நா ராமலிங்கம் அமிர்தலிங்கம் கார்த்தி அவ்வளவுதான்.. ராமலிங்கம் அமுது 2 பேருக்கும் கிட்டத்தட்ட ஏன் நிலை அதனால நாங்க விரைவில் நெருங்கிய நண்பர்கள் ஆயிட்டோம் :-) என்னோட நட்பு வட்டம் எப்ப எப்படி கொஞ்சம் கொஞ்சமா விரிவடைஞ்சிதுன்ட்டு இனி வரும் பதிவுகள்ள பாக்கலாம்.. இந்த வாரம் சிறந்த வாரமாக அமைய வாழ்த்துக்கள் அனைவருக்கும்..
கல்லூரி(கள் ஊறி) காலம்.. Kick is always there rite :-)
அன்புள்ள நண்பர்களுக்கு... இரண்டு நாள் இடைவேளை.. சரி புதுசா எதாச்சும் கலவரத்த உண்டு பண்ணனுமே அப்பத்தான் இந்த வாரம் கொஞ்சம் கல கலப்பா ஓடும்.. என்ன எழுதறது.. ' கவிதை.. நமக்கு வராது ஏன் அதை வம்புக்கு இழுக்கணும்... கதை.. கேட்கத்தான் தெரியும் சொல்ல தெரியாது.. பொது அறிவு .. பொதுவாவே அறிவு இல்லை இதுல பொது அறிவு வேறவா.. :-( சரி என்ன பன்னலாம்.. வேற வழி இல்ல வழக்கம் போல வெட்டியா எதாச்சும் பேச வேண்டியதுதான்.. சரி அப்படியே நம்ப கல்லூரி வாழ்க்கைல நடந்த ஏன் நினைவில இருக்கற சின்ன சின்ன விஷயங்கல பகிர்ந்த்துக்க்கலாம்னு நெனைக்கறேன்.. B . SC முடிச்சிட்டேன் எப்படியோ தட்டு தடுமாறி .. வாழ்க்கைல ஒரு இலக்கு தெளிவா இல்லாத வயசு(இப்ப வரைக்கும் இல்லையோ) அது.. அடுத்து என்ன பண்ணலாம்.. ஒரு தொழில் பண்ணலாம்னு ஆசை.. கணினி அறிவியல் படிச்சா திமிர்..browsing centre வைக்கலாம்னு ஆசை.. நல்ல நேரம் பண்ணல..நண்பர் கார்த்தி அண்ணாமலை பல்கலைகழகம்..நம்ம அன்போடு வரவேற்கும்.. M .C . A படிச்சி பெரிய கணினி பொறியாளரா ஆகலாம்னு ஒரு கனவை எற்படுத்துனான்(கடைசி வரைக்கும் கனவாவே போயிடுமோ) . நண்பன் எவ்வழி நானும் அவ்வழி..சேர்ந்துட்டேன் நம்ப கல்லூரி வளாகத்துல வலது காலை எடுத்து வச்சிட்டேன்.. முதல் நாள் நம்ப ஆபீஸ் பக்கம் ஏன் நடமாட்டம் அதிகமா இருந்தது(நம்ப என்னைக்கு வகுப்பு பக்கம் எட்டி பார்த்தோம்..)..எவ்வளவு பொண்ணுங்க..ஆனா அப்பா கூட வந்திருந்ததால உத்தம புத்திரனா குனிஞ்ச தலை நிமிரல... நம்புங்க மக்களே கடைசி வரைக்கும் அப்படியே இருந்திட்டேன்.. சரி சேர்ந்தாச்சு முதல் நாள் வகுப்பு..கார்த்திக்கு பள்ளி ஷங்கர் பாரதி அறிமுகம் ஏற்கனவே இருந்ததால சகஜ நிலைல இருந்தான்.. முதல்ல எனக்கு ஷங்கர் அறிமுகமானான்.. ஷங்கர் என்கிட்ட கேட்ட முதல் கேள்வி எவ்வளவு மதிப்பெண் என்ன ப்ராஜெக்ட் என்ன டெக்னாலஜி.. நெனச்சு பாருங்க..எவ்வளவு வருத்த பட்டிருப்பேன்.. யார பார்த்து என்ன கேள்வி...சரி இவன்கிட்ட 2 அடி தள்ளி நிக்கணும் படிக்கற புள்ளையா இருக்குண்டு நெனச்சேன்..வகுப்பறையும் பார்த்தாச்சு..எட்டி பாத்தேன் வகுப்ப..பொண்ணுங்க மட்டும்தான் இருந்தாங்க..உள்ளார போலாமா வேணாமா..ஒரு தயக்கம்.. எங்கட இந்த பயலுவ இன்னும் வரலன்ட்டு பார்த்தா வழக்கம் போல வெளிய சின்ன சின்ன குழுவா நின்னு அறிமுக படலம் நடக்குது .. எங்கடா இந்த கார்த்தின்னு தேடி பாக்கறேன்.. ஷங்கர் பாரதி அமுது கூட நின்னு காதுல இரத்தம் வர அளவுக்கு பேச்சு வார்த்தை நடக்குது..என்னால உடனே சேர முடியல.. ஒரு தயக்கதுல தூரத்துல இருந்து பார்த்துட்டு இருந்தேன். தூரத்துல ஒரு உருவம்..மெல்ல மெல்ல என்ன மாதிரியே தயங்கி தயங்கி எட்டி பாக்குது.. ஆஹா நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டாண்டா.. யாரு அதுன்னு.... அடுத்த போஸ்ட்ல பார்ப்போம்.... :-) @ALL - நீங்களும் உங்களோட சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்துக்கலாமே..ஒரு சின்ன travel நம்ப காலேஜ் lifekku .. I may be boring..If it is, sorry for that..All of you have a big role in it.. I thought of writing it in English..but on later part i felt i can express myself better in Tamil only..(English theriyathunga athaan unmai :-) ).. Expecting all ur reflections of this..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)