சனி, 9 ஏப்ரல், 2011

3.கல்லூரி(கள் ஊறி) காலம்.. Kick is always there rite :-)

அன்புள்ள நண்பர்களுக்கு., தினமும் நம்ம பதிவுகளை பகிர்ந்துக்கனும்னு நினைத்தேன் ஆனா முடியல.. வர வர அலுவலகத்துல வேலையெல்லாம் செய்ய சொல்றாங்க.. நாட்டுல என்ன நடக்குதுன்ட்டே புரியல..ஒரே அராஜகமா இருக்கு :-( சரி நம்ம கல்லூரியோட முதல் வாரத்துக்கு போகலாம் வாங்க..ஒரு நாள் முடிஞ்சிது ரொம்ப சீக்கிரம் வீட்டுக்கு போயாச்சு..அன்னைக்கு தூக்கமே வரல(எப்படி வரும் அதான் வகுப்புல நல்லா தூங்கிட்டனே).. அன்னைக்கு நடந்த நிகழ்வுகள்..புது அறிமுகங்கள்னு..அசை போட்டு தனியா சிரிச்சிட்டு இருக்கேன்(வேற எதுவும் இல்லைங்க உங்க மேல சத்தியம்)..அம்மா வந்து சாப்பிட கூப்பிடறாங்க..அவ்ளோதாங்க உலகமே மறந்துடுச்சி சாப்பிட போயிட்டேன்(அம்மா சொன்னத கவனிக்காம இருந்திருப்பெண்டு நெனச்சிங்களா ?).. ஒரு வாரம் ஆச்சு..ஒரு பதுகாப்புனர்வையும் நட்புணர்வையும் உணர ஆரம்பிச்சேன்(கடைசி வரைக்கும் படிக்கதான் இங்க வந்திருக்கோம்னு உணரல)..நா எடுத்த முடிவு தப்பானது இல்லைன்னு தெளிவு வந்துது..அதுக்கு இன்னொரு காரணம் நம்ம சண்முகராஜ் சீனு இருவரும் என்னோட பள்ளி நண்பர்கள்..முதல் வாரத்துலேயே எங்களோட விட்டு போன அலைவரிசைய புதுபிக்க முடிஞ்சிது.. வகுப்பு முடிஞ்சோன அமுது நா ராமலிங்கம் 3 பேரும் பேருந்து நிலையம் வரைக்கும் சேர்ந்து போற வழக்கம் உண்டானது.. இரண்டாவது வாரத்துல எங்க கூட்டணி நேரம் கொஞ்சம் விரிவடைஞ்சது..அதுக்குள்ள நெருங்கிய நட்ப்பானு கேக்கறீங்க..நா விரிவடைஞ்சதா சொன்னது எங்க நட்ப இல்ல..எங்க பயணத்தை.. ஆமா..போன வாரம் வரைக்கும் பேருந்து நிலையம் வரைக்கும் இந்த வாரத்துல இருந்து S P கோயில் தெருவுல இருக்க ஆனந்தா உணவகம் வரைக்கும்..தினமும் ஒருவர்ன்னு முறை வைத்து ஆனந்தா உணவகத்தை வளர்க்க ஆரம்பிச்சோம்..நாங்களும் கொஞ்சம் வளர்ந்தோம்(உயரம் இல்லைங்க அகலம்) இன்னைக்கு அங்க போனா கூட எங்க 3 பேருக்கும் ஒரு சின்ன கோவில் கட்டி பூஜை செய்யும் அருமையான காட்சிய ஆனந்தால பார்க்கலாம் நீங்க(இது பல மாதங்கள் தொடர்ந்தாலும் இந்த விஷயம் எங்க 3 பேர தவிர இன்று வரை வேற யாருக்கும் தெரியாது).. இரண்டாவது வாரத்துல இருந்து வகுப்பிலிருந்து உடனே கிளம்பும் பழக்கம் மாறி..எதாவது மரத்தடியில சின்ன பஞ்சாயத்துக்களை நடத்த ஆரம்பிச்சோம்....இப்பவும் என்னால பார்வையாலனாதான் இருக்க முடிஞ்சிது...மக்களோட சேட்டைகளை ரசிக்க ஆரம்பிச்சேன்..அதுல ஒரு மறக்க முடியாத சம்பவம்..சிவா ஒரு மிதிவண்டி வச்சிருந்தான்(அதுலதான் குரங்கு பெடல் அடிச்சிட்டு தினமும் கல்லூரிக்கு வருவான்).. நம்ப நண்பன் ஒருவன் அவன பார்த்து ஒரு கேள்வி கேட்டான்.. நண்பன் : மிதிவண்டி உயரம் கூட இல்லை உனக்கு மிதிவண்டி தேவையா..? சிவா : மச்சி நீ கூடத்தான் புகைவண்டில போற..அதுக்காக நீ என்ன புகைவண்டி உயரமா இருக்க? சிவாவை மற்றவர்கள் கவனிக்க மதிக்க காரணமான நிகழ்வு அதுதான் :-) அன்றிலிருந்து சிவாவை மக்கள் எல்லாரும் ஷாருக்கான் என்று அன்போட கூப்பிட ஆரம்பிச்சாங்க(பாவம் சிவா வஞ்சப்புகழ்ச்சி அணிய படிக்காம விட்டுட்டான்..) வகுப்பு நேரம் முழுக்க நண்பர்கள் புடை சூழ வாழ பழகியாச்சு.. ஆனா இந்த உணவு இடைவேளைக்கு மட்டும் யாரும் சிக்கல கொஞ்ச நாள்(நல்ல வேளை சிக்கல நா சாப்பிடறத பார்த்தே பல நண்பர்களுக்கு வயிறு நெறஞ்சிருக்கு.. எடுப்பு சாப்பாடு 2 சாப்பிடுவேங்க).. நம்ம புகைவண்டி நிலைய உணவகம்தான் எனக்கு சத்திரம் அப்ப(வீட்டுல இருந்து ஒரு டப்பா கொண்டு வந்திருக்கலாம் ஆனா என் மூளை மாதிரி என் கையும் எப்பவும் வெறுமையா இருக்கணும் எனக்கு :-)). அங்கதான் உணவு நேரம் முடியற வரைக்கும் தனிமையில் என்னோட நடமாட்டம் இருக்கும்...கொஞ்ச நாளுக்கப்புறம் ஏதோ ஒரு குழு என்னை கண்காணிப்பதை உணர்ந்தேன்..என் கவனத்துக்கும் வந்தாங்க..என்னை பார்த்து ஏதோ சொல்றாங்கண்டு புரியுது..நல்லதோ கெட்டதோ நம்பள பத்தி 4 பேசுறது தெரிஞ்சா ஒரு அல்ப்பத்தனமான பெருமை வருமே..அது எனக்கும் வந்துது...கொஞ்ச நாளுக்கப்புறம் என்கிட்ட பேச ஆரம்பிச்சாங்க. என்னையும் ஒரு மனுஷனா மதிச்சி பேச்சு கொடுத்த அந்த அப்பிராணிகள் யாருன்ட்டு அடுத்த பதிவுல பார்ப்போம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக